உலகச் சிறுவர் நலன் காப்பகம் (VBVO) இலங்கையில் உள்ள சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம் அமைப்புடன் இணைந்துகரம்கோடுப்போம்என்னும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். இத்திட்டமானது பெற்றோரை இழந்த சிறார்களிற்கான ஆரோக்கியமான வாழ்வையும் அவர்கட்கான நல்லதோர் எதிர்காலத்தையும் உருவாக்கிக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது

சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம் அமைப்பானது பெற்றோரை இழந்த சுமார் 1000 சிறார்களை பராமரித்து வருவதோடு இயன்ற அளவு அவர்களின் தாய் தந்தை வழி உறவினர்களுடன் இணைத்தும் வருகின்றது. இச்சிறார்களை பராமதிப்பதற்காக மாதாந்தம் தலா 1000 இலங்கை ரூபாய்களை கொடுப்பனவாக வழங்கியும் வருகின்றது.

கரம்கோடுப்போம் திட்டத்தின் ஊடாக நாம் முதற்கட்டமாக 50 பெற்றோரை இழந்த சிறார்களிற்கான ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக மாதாந்தம் 3000 டெனிஸ் குறோணர்கள் கொடுத்து உதவுவது என்னும் தீர்மானத்தை எடுத்துள்ளோம். இத்திட்டத்திற்காக நாம் பலதரப்பட்ட அமைப்புகள் சங்கங்கள் அத்தோடு தனி நபர்களிடம் இருந்தும் நிதியினை திரட்டலாம் என நம்பியுள்ளோம். 

எங்கள் இணையத்தளத்தில் நன்கொடையாளர்களின் விபரங்கள் மற்றும் இத்திட்டம் தொடர்பாக செய்திகளை பார்வையிடக்கூடியதாக இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

கரம்கோடுப்போம்திட்டத்திற்க்கு உங்கள் அனைவரதும் நல்லாசியும் ஆதரவும் எமக்கு தேவை என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Categories:

Tags:

Comments are closed